ட்ரெண்டிங்

சேலத்தில் க.அன்பழகனின் உருவப்படத்திற்கு அமைச்சர் மரியாதை!

சேலத்தில் க.அன்பழகனின் உருவப்படத்திற்கு அமைச்சர் மரியாதை!

தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பேராசிரியர் க.அன்பழகனின் 102- வது பிறந்தநாளையொட்டி, தி.மு.க.வின் சேலம் மாவட்ட அலுவலகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து, தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ராஜேந்திரன் மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் க.அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.