சேலம் வழியாக சாம்பல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் மார்ச் 12- ஆம் தேதி முதல் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை சாம்பல்பூரில் இருந்து ஈரோட்டிற்கும், மார்ச் 14 முதல் மே 02 வரை ஈரோட்டில் இருந்து சாம்பல்பூருக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (08311/08312) இயக்கப்படுகிறது.
வாரந்தோறும் புதன்கிழமைகளில் சாம்பல்பூரில் இருந்தும், மறுமார்க்கத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஈரோட்டில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள், குண்டூர், நெல்லூர், பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த ரயில்களுக்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


