ட்ரெண்டிங்

சேலம் மக்களுக்கு குட் நியூஸ்! 

சேலம் மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அழகாபுரத்தில் அமைந்துள்ள RATHNA SQUARE மால் நாளை (ஜூலை 11) மாலை 05.30 மணிக்கு திறக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ள நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, RATHNA SQUARE மாலை திறந்து வைக்கவுள்ளார். 

விழாவில், தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன், எம்.பி. டி.எம்.செல்வகணபதி, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

மாலில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 4 திரைகள் கொண்ட DNC மல்டி ஸ்கிரீன் சினிமா தியேட்டரில் 'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஜூலை 12- ஆம் தேதி வெளியாகவுள்ளது.  அதேபோல், மாலில் ஏற்கனவே Starbucks கடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கடைகளும் இங்கு அமையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த மால் மிகவும் பிரம்மாண்ட முறையில் கட்டப்பட்டுள்ளது. மாலுக்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனர். மால் முழுவதும் கண்காணிப்பு பணிக்காகக் சுமார் 50- க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.