சேலம் மாவட்டத்தில் சர்க்கரை உற்பத்திக்கு ஆலைகளுக்கு அதிகளவில் கரும்பு அனுப்பும் பணி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
சேலம்,நாமக்கல்,தர்மபுரி,கிருஷ்ணகிரி,என சேலத்தை சுற்றி உள்ள பல மாவட்ட பகுதிகளில் கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.இப்பகுதிகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடியாகிறது. இங்கு அறுவடை செய் யப்படும் கரும்பு 75 சதவீ தம் அரசு மற்றும் தனியார் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும்,25 சதவீதம் வெல் லம் தயாரிக்கும் ஆலை களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.தற்போது அனைத்து பகுதிகளிலும் கரும்பு விளைச்சல் அதிகரிப்பால் அறுவடை நடைபெற்றுவருகிறது. நன்கு விளைந்த கரும்பை விவசாயிகள் அறுவடை செய்து,சர்க்கரை ஆலைகளுக்கும், வெல்லம் - தயாரிக்கும் ஆலைகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.இதனால் கடந்த சில நாட்களாக அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை உற்பத்தி அதிக ரித்துள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் ஆலைகளிலும் உற்பத்தி தீவிரமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 2 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி நடக்கிறது. ஒருஏக்கருக்கு 30 முதல் 40 டன் வரை கரும்பு விளைச்சல் கிடைக்கிறது. கடந்த சில மாதமாக பெய்த தொடர் மழையால் கரும்பு அமோக விளைச்சலைதந்துள்ளது.அவ்வாறு விளைந்த கரும்பை விவசாயிகள் அறுவடை செய்து சர்க்கரை ஆலை, வெல்லம் ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கரும்பு அறுவடை நடந்து வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்பை விவசாயிகள் அரூர், பெரம்பலூர், விழுப்புரம், பாலக்கோடு உள்பட பல்வேறு பகு திகளில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
கரும்பு வெட்டும் கூலி,உழவு செய்தல்,பூச்சி மருந்து அடித்தல்,களை எடுத்தல்,தோகை கழித்தல்,டிராக்டர், லாரி வாடகை என கணக்கில் கரும்பு விவசாயிகளுக்கு கூலி கட்டுப்படியாகவில்லை.கரும்பு விவசாயிகளுக்கு உரியவிலை கிடைக்க அரசு ஆவணம் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் .

-xkInJN6ZE4.jpeg )
-SXgDfGgJfO.jpg)