சேலம் புத்தகத் திருவிழா நாளை மறுநாள் (நவ.29) தொடங்கவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இன்று (நவ.27) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, , சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் புத்தகத் திருவிழா 2024 வரும் நவ.29- ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, வரும் டிச.09- ஆம் தேதி திங்கள்கிழமை வரை சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெறவுள்ளது.
இப்புத்தகத் திருவிழாவினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நவ.29- ஆம் தேதி மாலை தொடங்கி வைக்கவுள்ளார். நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இப்புத்தகக் கண்காட்சியானது நாள்தோறும் காலை 10.00 மணிக்கு தொடங்கி இரவு 09.00 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்து கொள்ளும் வகையில் 200- க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், புத்தகத் திருவிழாவிற்கு வருபவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அதன் கருப்பொருள் அடிப்படையில் புத்தக அரங்குகளை வரிசைப்படுத்தி அமைத்திடவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இப்புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் வருகை புரிந்து இப்புத்தகத் திருவிழாவிற்கு பயன்பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வின்போது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



-SXgDfGgJfO.jpg)