சினிமா

பிருத்விராஜுக்கு மத்திய அரசு பாராட்டு

நடிகர் பிருத்விராஜ், ஜெயன் நம்பியார் இயக்கும் ‘விலாயத் புத்தா’ படத்தின் ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது காலில் காயமடைந்தார். இதற்காக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். இவர், பிருத்விராஜ் புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். படம் தயாரிப்பது மட்டுமின்றி விநியோகமும் செய்துவருகிறார். ரஜினியின் ‘பேட்ட’, விஜய்யின் ‘மாஸ்டர்’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘காந்தாரா’ உட்பட சில படங்களை கேரளாவில் விநியோகம் செய்துள்ளார்.

இந்நிலையில், 2022-23 நிதியாண்டில், பிருத்விராஜின் தயாரிப்பு நிறுவனம் சரியாக வரி கட்டியதால், அதைப் பாராட்டி மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மறைமுக வரிகள் வாரியம் சான்றிதழ் அளித்துள்ளது.