ட்ரெண்டிங்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!


சத்துணவு அங்கன்வாடி திட்டத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்களுக்கு அகவிலைப் படிவுடன் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் கு.வடிவேல் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஜூலை 10) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது, சத்துணவு அங்கன்வாடி திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாக அகவிலைப் படியுடன் கூடிய 6750 மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளன்றே எஸ்.பி.எப்., எப்.பி.எஃப்.,ஜி.பி.எஃப். ஆகிய பணப் பலன்களை வழங்க வேண்டும். ஈமக்கிரியை செலவினம் ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சேலம் மாவட்ட செயலாளர் நடராஜன், கே.ராஜவேலு, செஞ்சு லட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.