ட்ரெண்டிங்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: சேலம் மாவட்டத்தில் ஏற்பாடுகள் தீவிரம்!

 

சேலம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ய டோக்கன் வழங்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

மாவட்டத்தில்,உள்ள 10,87,256 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது அதை நுகர்வோர்கள் சிரமமின்றி பெற்றுக்கொள்ள வீடுதோறும் விநியோகம் செய்ய டோக்கன்கள் அச்சிடப்பட்டு அவை ரேஷன் கடை விற்பனையாளருக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. 

டோக்கன்களை பெற்றுக் கொண்ட விற்பனையாளர்கள் அதை பூர்த்தி செய்து தயாராக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது டோக்கனில் நுகர்வோர் பெயர் தெரு அல்லது பதிவேடு எண் டோக்கன் எண் ஆகியவற்றை குறிப்பிடவும் அதை வீடு தேடி கொடுப்பதற்கு முன் பொங்கல் பரிசு தொப்புக்கு வழங்கப்படும் நாள் நேரத்தை அதில் குறிப்பிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை மாலை தலா 100 பக்கம் விதம் பொங்கல் பரிசு உபயோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது ஜனவரி 4 நாளை 5 ல் தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி சென்று ரேஷன் பொருள் விநியோகம் நடைபெற உள்ளது. 

பின்னர் 6 மற்றும் 7 ம் தேதிகளில் டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெறும் தொடர்ந்து அரசு உத்தரவின் படி 1541 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் நுகர்வோர்களுக்கு முறையாக வழங்கப்படும் என துணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார் மேலும் தாலுகா வாரியாக பச்சரிசி சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.