ட்ரெண்டிங்

மருத்துவர்கள் கால தாமதமாக வருவதால் நோயாளிகள் அவதி!

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தாமதமாக வருவதால், பல மணி நேரம் காத்திருக்கும் அவலநிலை நீட்டித்து வருவதாக பொதுமக்களும், நோயாளிகளும் புகார் தெரிவித்துள்ளனர்.

 

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் காலை 07.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நோயாளிகளைச் சந்தித்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், சமீப காலமாக மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வராமல், காலை 11.00 மணிக்கு மேல மருத்துவமனைக்கு வருவதால், நோயாளிகள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்வதால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

 

டயாலிசிஸ் நோயாளிகள் அதிகளவு வருவதால், அதற்கான உபகரணங்களும், நிபுணர்களும் இல்லாததால், அவர்கள் அலைக்களிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

 

இது குறித்து மருத்துவமனையின் அதிகாரிகள் கூறுகையில், "இது குறித்து தமிழக மருத்துவத்துறை கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. விரைவில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது" என்று உறுதியளித்துள்ளார்.