ட்ரெண்டிங்

உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.456 கழிக்கப்பட்டதா?

உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.436 மற்றும் ரூ.20 என மொத்தம் ரூ.456 கழிக்கப்பட்டதா? கவலைப்பட வேண்டாம். ஏனெனில் பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டம் PMSBY மற்றும் பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் PMJJBY ஆகிய இன்சூரன்ஸ் திட்டங்களுக்காக பணத்தைக் கழிப்பதாக வங்கிகள் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, பிரதமரின் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PMJJBY) திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். மேலும், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் PMSBY என்பது விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும். அதாவது, பாலிசிதாரர் விபத்து காரணமாக உயிரிழந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு பணம் கிடைக்கும்.