ட்ரெண்டிங்

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சேலம் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார அளவில் காலியாகவுள்ள 6 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இப்பணிகளில் சேர இளநிலை பட்டபடிப்புடன் 6 மாத எம்.எஸ்.ஆபிஸ் சான்றிதழ் படிப்பும், 2 வருடம் (மகளிர் திட்டம் தொடர்பான பணிகளில்) பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

மேலும், தங்களது வசிப்பிடம் சம்மந்தப்பட்ட வட்டாரத்திற்குள் (கொளத்தூர், தலைவாசல், மகுடஞ்சாவடி, ஏற்காடு, கெங்கவல்லி) இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூபாய் 12,000  வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு பின் தேர்தெடுக்கப்படும் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமார்த்தப்படுவார்கள்.

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், அறை எண்:207, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம், என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் மாதம் 4- ஆம் தேதிக்குள் அனுப்ப தெரிவிக்கப்படுகிறது." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.