ட்ரெண்டிங்

அணையில் நீர்மட்டம் சரிந்ததால் வெளியே தெரியும் புராதான சின்னங்கள்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 59 அடியாகக் குறைந்துள்ள நிலையில், பண்ணவாடி பரிசல் துறையில் நந்தி சிலை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோயில் கோபுரம் நீருக்கு வெளியே காட்சியளிக்கிறது. 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள சூழலில், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. 

தற்போது அணையின் நீர்மட்டம் 59 அடியாகக் குறைந்துள்ள நிலையில், புராதான சின்னமான பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள நந்தி சிலை,  ஜலகண்டேஸ்வரர் கோயில் கோபுரம், கிறிஸ்துவ ஆலயத்தின் கோபுரம்  ஆகியவை நீருக்கு வெளியே முழுமையாகக் காட்சியளிக்கிறது.