ட்ரெண்டிங்

மேட்டூரில் புராதனச் சின்னங்களைக் காணக் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37 அடியாகக் குறைந்துள்ள நிலையில், பண்ணவாடி பரிசல் துறையில் நந்தி சிலை மட்டும் ஜலகண்டேஷ்வர் ஆலயக் கோபுரம் முழுமையாக வெளியே தென்பட்டது.

 

90 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கம்பீரமாகக் காட்சி அளித்து கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் புராதன சின்னங்களான நந்தி சிலையையும், ஜலகண்டேஷ்வர் ஆலயக் கோபுரத்தையும் காண பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் தற்போது அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன.

 

இது தொடர்பான வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்துக் கொள்ளும் வகையில், மேட்டூர் அணையில் இருக்கும் புராதன சின்னங்களை அரசுப் பாதுகாக்க முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

தற்போது, பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பூங்காக்களில் சிறுவர், சிறுமிகளின் கூட்டம் அலைமோதியது.