ட்ரெண்டிங்

அக்.16- ஆம் தேதி முதல் சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான சேவை- முழுமையான தகவல்!

தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபனின் பலமுறை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி கோரிக்கை வைத்து நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு வரும் அக்டோபர் 16- ஆம் தேதி முதல் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து பெங்களூருவுக்கும், பெங்களூருவில் இருந்து சேலத்துக்கும், சேலத்தில் இருந்து கொச்சினுக்கும், கொச்சினில் இருந்து சேலத்துக்கும் விமான சேவையை உதான் திட்டத்தின் கீழ் தொடங்க அலையன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதேபோல், சேலத்தில் இருந்து சென்னை வழியாக ஹைதராபாத்திற்கும், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வழியாக செல்வத்திற்கும் அக்டோபர் மாத இறுதியில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையைத் தொடங்கவுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த தகவலை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனிடையே, சேலம் விமான நிலையத்தில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், விமான சேவைத் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றனர்.

இந்த விமான சேவையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா காணொளி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் கூறுகின்றனர்.