சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உலர் பழக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம், அரங்கபாலா நகரில் ரவிச்சந்திரன் என்பவர், உலர் பழக்கடையை நடத்தி வருகிறார். இவர் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில், கடையில் இருந்த ஊழியர்கள் கடையைப் பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில், கடையில் இருந்த கரும்புகை வருவதாக வந்த தகவலை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதும் அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், கணினி, ஏ.சி. சாதனம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தனர். இவற்றின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


