சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சாக்கடை வசதிகள் இல்லாததால், குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள கழிவுநீரால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தலைவாசலில் உள்ள இந்தியா நகர் பகுதியில் 400- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதி வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் இன்றியும், தெருக்கள் வழியாகச் செல்லும் கழிவுநீர் கால்வாய் வழியாக, செல்லும் கழிவு நீர், வெளியேற வழியில்லாமல், குடியிருப்புப் பகுதியிலேயே தேங்கி நிற்கிறது.
மேலும், குப்பைகள் மற்றும் கழிவுகள் அதிகளவில் தேங்கி நிரம்பி கிடப்பதால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், இளங்கோ கூறுகையில், "சம்மந்தப்பட்ட பகுதிகளில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்துள்ளார்.


