ட்ரெண்டிங்

ஆத்தூரில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நாட்டு வைத்தியர்கள் கருத்தரங்கம்

ஆத்தூரில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நாட்டு வைத்தியர்கள் கருத்தரங்கம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் வனக்கோட்டத்தின் சார்பில் நாட்டு வைத்தியர்கள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்.இ.ஆ.ப. தலைமையில் ஆத்தூர் கிரீன் பள்ளியில் நேற்று (ஜூலை 09) நடைபெற்றது. 

ஆத்தூர் வனக்கோட்டத்தின் சார்பில் 2023- ஆம் ஆண்டிற்கான நாட்டு வைத்தியர்கள் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் (TBGPCCR) கீழ், தமிழ்நாடு வனத்துறை, JICA (Japan Intemational Co-operation Agency) இணைந்து இக்கருத்தரங்கம் நடைபெற்றது. 

இக்கருத்தரங்கானது தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விட மேம்பாடு, காடு வளர்ப்பு மற்றும் நிறுவன திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் பல்லுயிர்ப் பாதுகாப்பை மேம்படுத்துவது, அதன் மூலம் தமிழ்நாட்டின் இயற்கையுடன் இணக்கமான சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதே இதன் நோக்கமாகும். 

மேலும், பழங்குடியினர் மற்றும் உள்ளூர் மக்களிடையே பாரம்பரிய அறிவைப் பாதுகாத்தல்" ஆகும். TBGPCCR-ன் கீழ் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கையின் ஒரு அங்கமாக இக்கருத்தரங்கம் நடைபெற்றது. ஒரு நாள் இக்கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 250- க்கும் மேற்பட்ட பாரம்பரிய வைத்தியர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர். 

இக்கருத்தரங்கில் ஆத்தூர் மாவட்ட வன அலுவலர் சுதாகர். இ.வ.ப. உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.