பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற்று குறைகளுக்கு தீர்வுகாண ஏதுவாக, இன்றைய தினம் சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்புத் திட்ட முகாமைத் தொடங்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இம்மனுக்களை தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்களை விரைந்து தீர்வு காண அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளார்.
பல்வேறு துறைகளின் மூலம் 34 பயனாளிகளுக்கு ரூபாய் 10.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை
அமைச்சர் வழங்கினார்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


