ட்ரெண்டிங்

சொத்துத் தகராறில் தாயைக் கொலை செய்த மகனை கைது செய்தது காவல்துறை! 

 

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி  ராணி (வயது 63). சத்துணவு அமைப்பாளராக இருந்து  ஒய்வுப்பெற்ற இவர், வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகன் இளங்கோவன் (வயது 47). ஓட்டுநரான இவர் விபத்தில் ஒன்றில் சிக்கி வலதுக் காலை இழந்து, கட்டைக்கால் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மது போதைக்கு அடிமையான இளங்கோவன் நேற்று (ஆகஸ்ட் 01) காலை தனது அம்மா  ராணியிடம், அவரது பெயரில் உள்ள காலிமனைகளை விற்பனை செய்து விடலாம் எனக் கூறி, அந்த மனைக்கான பத்திரத்தைக் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ராணியிடம் தகராறு செய்த இளங்கோவன், ஆத்திரத்தில் தனது வலது காலில் பொருத்தியிருந்த கட்டைக்காலைக் கழற்றி சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். 

இதில் ராணி படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராணியை மீட்ட அவரது உறவினர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 02) காலை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தம்மம்பட்டி காவல்துறையினர், இளங்கோவன் மீது கொலை வழக்கைப் பதிவுச் செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சொத்துத் தகராறில் பெற்ற தாயையே மகன் கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.