ட்ரெண்டிங்

ஆத்தூர் : தலைவாசல் அருகே அரசு பள்ளியில் மாணவர்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை கூண்டு வைத்த

  சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆறகழூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் உள்ளூர் மட்டுமின்றி பெரியேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர், இன்னிலையில் பள்ளி நேரங்களில் மாணவர்கள் வகுப்பறை மற்றும் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் போது குரங்குகள் அப்பகுதியில் உலா வருவதோடு அவர்கள் கொண்டு வரும் உணவுகளை எடுத்து செல்வதால் மாணவர்கள் அச்சத்தில் பள்ளிக்கு சென்று வருவதோடு கல்வி கற்க முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர், இதனையடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் உலா வரும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினருக்கு பலமுறை கோரிக்கை வைத்து வந்தனர், இதனை தொடர்ந்து ஆத்தூர் வனத்துறை சார்பில் பள்ளி வளாகத்தில் குரங்குகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது, அந்த கூண்டில் எட்டு குரங்குகள் சிக்கின, குரங்குகளை பிடித்த வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டதால் மாணவர்கள் நிம்மதியடைந்தனர்