ஆன்மிகம்

சேலம் விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படும் நேரத்தை மாற்றியமைத்து சேலம் விமான நிலையம் புதிய பயண நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது. 

அட்டவணையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு காலை 09.35 மணிக்கும், ஹைதராபாத்தில் இருந்து சேலத்திற்கு காலை 10.45 மணிக்கும் புறப்படும். அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கொச்சினில் இருந்து சேலத்திற்கு நண்பகல் 12.10 மணிக்கும், பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு பிற்பகல் 03.20 மணிக்கும் புறப்படும். அதேபோல் இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து சேலத்திற்கு பிற்பகல் 03.30 மணிக்கு புறப்படும். 

மறுமார்க்கத்தில், இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு காலை 10.55 மணிக்கும், சேலத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு மதியம் 01.00 மணிக்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கு மாலை 05.00 மணிக்கும் விமானங்கள் புறப்படும். அதேபோல், அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் விமானங்கள் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு மதியம் 01.45 மணிக்கும், சேலத்தில் இருந்து கொச்சினுக்கு மாலை 04.45 மணிக்கும் புறப்படும். 

இந்த புதிய நேர அட்டவணை வரும் மார்ச் 30- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விவரங்களுக்கு சேலம் விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.