ட்ரெண்டிங்

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவருக்கு நோட்டீஸ்!

 

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பிரியா மீது உறுப்பினர்கள் அளித்த புகாரில் 15 நாட்களுக்குள் அவர் விளக்கம் அளிக்குமாறு ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் பிரியா, பல்வேறு முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கோரி, ஒன்றிய குழு உறுப்பினர்கள், கடந்த அக்டோபர் மாதம் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பிரியாவின் வீடு பூட்டியிருந்த நிலையில், வீட்டின் கதவு முன்பு அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றனர்.