ட்ரெண்டிங்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது! 

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கெங்கவல்லியில் உள்ள கடம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் மணி (வயது 63). விவசாயியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 24 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், அந்த பெண் கர்ப்பமாக்கியுள்ளார். 

எட்டு மாதம் கர்ப்பமாக உள்ள அந்த பெண்ணின் காலில், வீக்கம் இருப்பதைப் பார்த்த பெண்ணின் அண்ணன் உடனடியாக, கூடமலை அரசு மருத்துவமனைக்கு தனது தங்கையை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதைக் கூறினர். 

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் அண்ணன், கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், அந்த முதியவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், முதியவரை சிறையில் அடைத்தனர்.