ட்ரெண்டிங்

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்! 

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் (வயது 98) உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஏப்ரல் 09) காலமானார். 

யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்- விரிவான தகவல்! 

கடந்த 1926- ஆம் ஆண்டு செப்டம்பர் 09- ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்றவர். 

கடந்த 1963- ஆம் ஆண்டு சத்யா மூவிஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆர்.எம்.வீரப்பன் தொடங்கினார். இதயக்கனி, ரிக்ஷக்காரன், மூன்று முகம், காக்கிச்சட்டை, பாட்ஷா உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.  

நெல்லை, காங்கேயம் சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து தலா ஒருமுறை வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றார்.