ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது- விரிவான தகவல்!

 

சேலம் மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், புத்திரகவுண்டன்பாளையம், ஆத்தூர், சிங்கிபுரம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (டிச.02) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆத்தூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், ஆத்தூர் நகரம், முல்லைவாடி, கோட்டை, புதுப்பேட்டை ,வடக்குக்காடு, சந்தனகிரி, அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை, துலுக்கனூர், கல்லாநந்தம், முட்டல், தெற்குகாடு, பைத்தூர். வானபுரம், கல்லுக்கட்டு, தவளப்பட்டி, நரசிங்கபுரம், விநாயகபுரம், செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம், பழனியாபுரி, அக்கிசெட்டிப்பாளையம், சொக்கநாதபுரம், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, மஞ்சினி, வளையமாதேவி ஆகிய பகுதிகளில் நாளை (டிச.02) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புத்திரகவுண்டன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீர கவுண்டனூர், காந்தி நகர், தளவாய்பட்டி, தென்னம்பிள்ளையூர், ஒட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியபாளையம், பெத்தநாயக்கன்பாளையம், எருமசமுத்திரம், சின்னசமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, வைத்திய கவுண்டன்புதூர், பெரிய கிருஷ்ணாபுரம், முத்தானூர், படையாச்சியூர் ஆகிய பகுதிகளை நாளை (டிச.02) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், சிங்கிபுரம், மேற்குராஜபாளையம், வண்ணாத்திக்குட்டை, கரடிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (டிச.02) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.