ட்ரெண்டிங்

வங்கி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது!

 

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமி, தனது பெற்றோரிடம், சேலம் மாவட்டம், லோக்கூரைச் சேர்ந்த ஒருவர் தன்னை வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை அழைத்துக் கொண்டு ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

 

இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான ஹானஸ்ட்ராஜ் (வயது 27) என்பவர் தான் சிறுமியை வன்கொடுமை செய்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

 

இதையடுத்து, அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

வங்கி ஊழியர் சேலம் மாவட்ட கிளையில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.