ட்ரெண்டிங்

சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு!

சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு! 

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்து கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் விலை சரிந்துள்ளது. 

கடந்த  இரண்டு வாரங்களாக, 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம், தற்போது கிலோவுக்கு 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. அதன்படி, சின்ன வெங்காயத்தின் முதல் ரகம் 90 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 80 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சின்ன வெங்காயத்தின் விலை சரிவு சாமானிய மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்தாலும், தக்காளியின் விலை சில்லறை விற்பனையில் ரூபாய் 160- க்கு மேல் விற்பனை செய்யப்படுவது, அவர்களை கவலையடையச் செய்துள்ளது