ட்ரெண்டிங்

புரட்டாசி மாதத்தால் சந்தையில் ஆடுகளின் விற்பனை சரிவு!

ஓமலூருக்கு அருகே உள்ள சந்தையில் ஆடுகள் விற்பனையாகாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்வதற்காக,  சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சின்னத்திருப்பதியில் உள்ள ஆட்டுச்சந்தைக்கு கொண்டு வந்தனர். ஆனால் புரட்டாசி மாதம் என்பதால், ஆடுகளின் விற்பனை வெகுவாகக் குறைந்தது.

கடந்த வாரம் ரூபாய் 7,500- க்கு விற்பனையான 10 கிலோ எடைக்கொண்ட ஆடுகள் 6,000 ரூபாயாகக் குறைந்து விற்பனை செய்யப்பட்டன. ஆடுகளின் விற்பனை சரிவு மற்றும் விலைக் குறைவுக் காரணமாக, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.