ட்ரெண்டிங்

4,379 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் போனது!

 

சேலம் மாவட்டம், ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், கொப்பரைத் தேங்காய் விலை உயர்ந்து, ஒரு கிலோ 91 ரூபாய்க்கு விற்பனையானது. முதல் தரம் மற்றும் இரண்டாம் தரம் கொப்பரை தேங்காய் கிலோவிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இன்றைய ஏலத்தில் 4,379 கிலோ கொப்பரை தேங்காய் 3.85 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. தரத்தைப் பொறுத்து அதிகபட்ச விலை 90.99 ரூபாயாகவும், குறைந்தபட்ச விலை 64.79 ரூபாயாகவும் இருந்தது. வழக்கத்தை விடக் கூடுதல் விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

மின்னணு முறையில் நடைபெற்ற ஏலத்தில் ஓமலூர், வாழப்பாடி, அயோத்தியாபட்டினம், எடப்பாடி, தாரமங்கலம் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.