ட்ரெண்டிங்

பூண்டு விலை பாதியாகக் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக வரத்து அதிகரிப்பால் பூண்டு விலை பாதியாகக் குறைந்துள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள மண்டியில் பூண்டு ஒரு கிலோ ரூபாய் 150 முதல் ரூபாய் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வட மாநிலங்களில் பெய்த கனமழையால் பூண்டு விளைச்சல் பாதித்து, வரத்துக் குறைந்து காணப்பட்டது.

இதனால் சில வாரங்களுக்கு முன்பு வரை பூண்டு ஒரு கிலோ ரூபாய் 400 முதல் ரூபாய் 500 வரை விற்பனை.  தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டின் விலை கணிசமாக உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், வட மாநிலங்களில் பூண்டு அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதால், அங்கிருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளது. எனவே, பூண்டின் விலை குறையத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் கிலோவுக்கு  கிலோவுக்கு ரூபாய் 100 வரை குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் வாரங்களில் பூண்டின் விலை மேலும் குறையும் எனத் தெரிவித்துள்ள வியாபாரிகள், விற்பனை அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.