ட்ரெண்டிங்

நாட்டுத் தட்டைப்பயிர் விளைச்சல் அமோகம்- விவசாயிகள் மகிழ்ச்சி!

ஓமலூர் பகுதியில் நாட்டுத் தட்டைப்பயிர் விளைச்சல் அமோகமாக இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டம், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்டப் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் நாட்டுத் தட்டைப் பயிரினைப் பயிரிட்டுள்ளனர். தற்போது விளைச்சல் அமோகமாக இருப்பதால், ஒரு கிலோ தட்டைப் பயிர் ரூபாய் 90- க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். 

அதேபோல், சில்லறை விற்பனையில் 120 ரூபாய் வரையில் தட்டைப் பயிர் கொள்முதலாகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு 60,000 ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர். 

தட்டைப் பயிர் விளைச்சல் அதிகரித்துள்ளதால், சேலம் லீ பஜார், சூரமங்கலம் உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் தட்டைப் பயிரின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.