விளையாட்டு

விறுவிறுப்பாக நடைபெற்ற ஜூனியர் சாஃப்ட் டென்னிஸ் போட்டி!

விறுவிறுப்பாக நடைபெற்ற ஜூனியர் சாஃப்ட் டென்னிஸ் போட்டி! 

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியர் சாஃப்ட் டென்னிஸ் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஈரோடு வீராங்கனை வினோதினி 3-2 என்ற புள்ளி கணக்கில் சேலம் வீராங்கனை நிஷாலினியை வீழ்த்தி தங்கம் பதக்கம் வென்றார். 

அதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் வேலூர் வீரர் சஞ்சய், சேலம் வீரர் ரிஷ்வந்த்தை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார். இதையடுத்து, இருவரும் தேசிய அளவிலான சாஃப்ட் டென்னிஸ் போட்டிக்கு தகுதிப் பெற்றனர்.