ட்ரெண்டிங்

இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவான ரவுடி கைது!

 

சேலம் அம்மாப்பேட்டையில் இரட்டை கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 8 மாதங்கள் தலைமறைவாக இருந்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

சேலம் அம்மாப்பேட்டை முனியப்பன் கோயில் தெருவை சேர்ந்தவர் வரதராஜ் மகன் கோபி (வயது 37), பிரபல ரவுடி இவரை கடந்த 2009- ஆம் ஆண்டு இரட்டைக் கொலை வழக்கில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இந்த வழக்கு தொடர்பாக, சேலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்கும் நிலையில், கடந்த 8 மாதத்திற்கு முன்பிருந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ரவுடி கோபி தலைமறைவானார். இதனால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான ரவுடி கோபியை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவுப் பிறப்பித்தது. இதன்பேரில், அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் ரவுடி கோபியைப் பிடிக்க தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

 

அதில் அவர். நாகப்பட்டணத்தில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நாகப்பட்டினம் சென்று ரவுடி கோபியை அதிரடியாக கைது செய்தனர். அவரை இன்று (பிப்.05) காலை சேலம் அழைத்து வந்தனர். ரவுடி கோபியை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.