ட்ரெண்டிங்

ஓமலூர் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்! 

மகாவீர் ஜெயந்தியையொட்டி, சேலம் மாவட்டம், ஓமலூர் ஆட்டுச்சந்தையில் 25 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே ஆடுகள் விற்பனை நடைபெற்றது. 

ஓமலூர் ஆட்டுச்சந்தையில் வழக்கமாக ரூபாய் 1 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெறும் நிலையில், இன்று (ஏப்ரல் 20) வர்த்தகம் குறைந்துக் காணப்பட்டது. காடையாம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகளை ஆடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். 

வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில், இன்று (ஏப்ரல் 20) ஆடுகள் வரத்துக் குறைந்து காணப்பட்டது. நாளை (ஏப்ரல் 21) மகாவீர் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆடுகள், கோழிகள் இறைச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 

இதனால் ஆடுகள் விற்பனை வெகுவாகக் குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.