ட்ரெண்டிங்

600 மெகாவாட் அனல் மின்நிலைய கொதிகலன் குழாயில் வெடிப்பு!

 

சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்ததன் காரணமாக, 545 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 1,440 மெகாவாட் மின் உற்பத்திச் செய்யப்படுகிறது.

 

இந்த நிலையில், 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் உள்ள கொதிகலன் குழாய் வெடிப்புக் காரணமாக, மின் உற்பத்தி பாதிக்கப்படைந்தது.