ட்ரெண்டிங்

வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 9 லட்சம் மோசடி!

 

சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர், ஆன்லைனில் பகுதி நேர வேலையைத் தேடினார். இந்த நிலையில், இவரது வாட்ஸ் அப்- எண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 20- ஆம் தேதி பகுதி நேர வேலை குறித்து விளம்பரம் வந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்த எண்களை, டெலிகிராம் மூலம் இளைஞர் தொடர்புக் கொண்டு பேசினார்.

எதிரே பேசிய மர்ம நபர், ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெற முடியும் எனக் கூறியுள்ளார். அதை நம்பிய இளைஞர், மர்மநபர் அனுப்பிய வங்கி விவரங்களுக்கு பல்வேறு தவணைகளாக 9,33,710 ரூபாயை அனுப்பியுள்ளார்.  பணம் சென்றடைந்த நிலையில், மர்மநபர் தொடர்பை துண்டித்துக் கொண்டார்.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர், நவம்பர் 27- ஆம் தேதி சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, வழக்கு பதிவுச் செய்துள்ள சைபர் கிரைம் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மேலும், வங்கிக் கணக்கு விவரங்களை சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி, பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய தொலைபேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகளையோ, எஸ்எம்எஸ்களையோ, வாட்ஸ் அப் செய்திகளையயோ நம்ப வேண்டாம்; மேலும், ஆஃபர் என்று குறிப்பிட்டு வரும் லிங்க்-களை கிளிக் செய்ய வேண்டாம் என்று சேலம் மாவட்ட கிரைம் காவல்துறையினர், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.