மீலாது நபி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூட சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீலாது நபி தினமான செப்டம்பர் 28- ஆம் தேதி வியாழக்கிழமை அன்றும், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 02- ஆம் தேதி திங்கட்கிழமை அன்றும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்காணும் நாட்களில் இதனை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


