ட்ரெண்டிங்

நாளை இந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது,என அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் சங்ககிரி,புத்திரக்கவுண்டன்பாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (அக்.05) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, சங்ககிரி துணை மின்நிலையத்திற்கு உட்பட்டப் படைவீடு, பச்சாம்பாளையம், கொழிஞ்சிபாளையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சகொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனூர், வெப்படை, சவுதாபுரம், பாதரை, அம்மன் கோயில், மக்கிரிபாளையம், முதலை மடையானூர், திருநகர் பைபாஸ் சிட்டி உள்ளிட்டப் பகுதிகளில் நாளை (அக்.05) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

புத்திரகவுண்டன்பாளையம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட ஏத்தாப்பூர், அபிநவம், வீரகவுண்டனூர், காந்திநகர், தளவாய்பட்டி, தென்னம்பிள்ளையூர், ஓட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியப்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம், எருமசமுத்திரம், சின்னம சமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, வைத்தியக்கவுண்டன்புத்தூர், பெரிய கிருஷ்ணாபுரம், முத்தானூர், படையாச்சியூர் ஆகிய பகுதிகளில் நாளை (அக்.05) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.