சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே ரயில் மின் பாதை அறுந்ததால், மங்களூரு- சென்னை, கோவை- மும்பை ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றனர்.
கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து சங்ககிரி நோக்கி வந்த சிறப்பு ரயில், ஆனங்கூர் மற்றும் சங்ககிரி ரயில் நிலையங்கள் இடையே உள்ள பாலத்தின் அடியில் செல்லும் மின் பாதையில் மோதித் துண்டானது. இதில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக மின் பாதையை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சுமார் மூன்று மணி நேரத்திற்கு பிறகு மின் பாதை சரிச் செய்யப்பட்டு, ரயில்கள் இயக்கப்பட்டன.



-SXgDfGgJfO.jpg)