ட்ரெண்டிங்

4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை அழித்த காவல்துறையினர்!

 

சேலம் மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் அதிரடி மதுவிலக்கு சோதனையில் 4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை காவல்துறையினர் அழித்தனர்.

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர், கல்வராயன் மலைப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஈச்சங்காடு, சின்ன திருப்பதி, விளாம்பட்டி ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப் பயன்படுத்தப்படும் 4,000 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 10 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை கீழே கொட்டி அழித்தனர்.

 

இது குறித்து வழக்குப்பதிவுச் செய்துள்ள மதுவிலக்கு காவல்துறையினர், கள்ளச்சாராயம் காய்ச்சியது யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.