கெங்கவல்லிக்கு அருகே கமிஷன் தொகை விவகாரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தாக்கப்பட்டார்.
சேலம் மாவட்டம், நாகியம்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், ஓராண்டுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பெரியசாமி என்பவர் மூலமாக மூன்று ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதற்காக, வழங்க வேண்டிய கமிஷன் தொகையை பாலமுருகன் தர மறுத்ததாகக் கூறப்படும் நிலையில் தான் வாங்கிய நிலத்தை விற்பனை செய்ததாகத்தெரிகிறது.
இதையறிந்த ரியல் எஸ்டேட் அதிபர் கமிஷன் தொகையை அவரிடம் கேட்ட போது, அதிபர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாலமுருகன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் தம்மம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து, அவரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, பாலமுருகனை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.


