நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வரும் ஜூலை 27- ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வரும் ஜூலை 27- ஆம் தேதி அன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3- வது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு நிதி ஆயோக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமருடனான சந்திப்பின் போது, தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


