ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது?- விரிவான தகவல்!

சேலம் மாவட்டத்தில் கந்தம்பட்டி, கருமந்துறை, நங்கவள்ளி ஆகிய மூன்று துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் நாளை (ஆகஸ்ட் 10) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
  


நங்கவள்ளி துணை மின்நிலையத்தில் நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சூரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரியவனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 10) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.