ட்ரெண்டிங்

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை- மியாட் மருத்துவமனை அறிக்கை!

 

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்று மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

காய்ச்சல் மற்றும் வழக்கமான பரிசோதனைக்காக, கடந்த நவம்பர் 18- ஆம் தேதி விஜயகாந்த், சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்,

நடிகரும், தே.மு.தி.கவின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.