ட்ரெண்டிங்

ஓமலூர் விற்பனைக் கூடத்தில் 1,154 கொப்பரை பருப்பு மூட்டைகள் விற்பனை! ஓமலூர் விற்பனைக் கூடத்தில

ஓமலூர் விற்பனைக் கூடத்தில் 1,154 மூட்டைக் கொப்பரை பருப்பு 5 லட்சத்து 22 ஆயிரத்து 682 ரூபாய்க்கு விற்பனையானது. 

சேலம் மாவட்டம், ஓமலூரில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று (செப்.12) நடைபெற்ற ஏலத்திற்கு 13 விவசாயிகள் உற்பத்திச் செய்த 1,154 மூட்டைக் கொப்பரைப் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 

இதில் சுமார் 42 வகையான எண்ணெய் பிழித்திறன் கொண்ட 73 குவிண்டால் கொப்பரைப் பருப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தேசிய அளவில் நடைபெற்ற மின்னணு ஏலத்தில் 4 வியாபாரிகள் கலந்து கொண்டு 5 லட்சத்து 22 ஆயிரத்து 682 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தனர். 

இதில் பருப்பின் தரத்தைப் பொறுத்து கிலோ அதிகபட்ச விலையாக 77.64 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 60 ரூபாய்க்கும், சராசரி விலையாக 75.55 ரூபாய்க்கும் விற்பனையானது. வழக்கத்தை விடக் கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.