ட்ரெண்டிங்

சேலம் விமான நிலையத்தின் புதிய இயக்குனராக விஜய் உபாத்தியாய் பொறுப்பேற்பு!

 

சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி ஆகிய 4 முக்கிய நகரங்களுக்கு தினசரி விமான சேவையை அலையன்ஸ் ஏர், இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகின்றனர்.

 

இந்த நிலையில், சேலம் விமான நிலையத்தின் இயக்குநராகப் பணியாற்றி வந்த ரவீந்திர சர்மா, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், சேலம் விமான நிலையத்தின் உதவி பொதுமேலாளர் ரமேஷ், கூடுதல் பொறுப்பாக விமான நிலைய இயக்குநர் பொறுப்பை கவனித்து வந்தார். இந்நிலையில், ப்புதுச்சேரி விமான நிலைய இயக்குநராக பணியாற்றி வந்த விஜய் உபாத்தியாயை சேலம் விமான நிலைய இயக்குநராக இடமாற்றம் செய்து மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சேலம் விமான நிலையத்தின் இயக்குநராக விஜய் உபாத்தியாய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு விமான நிலைய அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.