ட்ரெண்டிங்

போகிப் பண்டிகை- உற்சாகத்துடன் பொதுமக்கள் கொண்டாட்டம்!

 

பொங்கலின் தொடக்கமாக போகிப் பண்டிகை தமிழகத்தில் வழக்கமான உற்சாகத்துடன் இன்று (ஜன.14) கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளைத் தூய்மைப்படுத்தி பழையப் பொருட்களை வீட்டின் முன் எரித்து போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகைக் கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் போகிப் பண்டிகைக்கு காப்புக் கட்டும் சம்பிரதாயம் உள்ளது. வேப்பிலை, ஆவாரம்பூ, சங்கராந்தி, பண்ணைபூ ஆகியவற்றைச் சேர்துது, வீட்டின் முகப்பு வாசல் முன்பு உள்ள மாடத்தில் வைத்து வழிபடுகின்றனர்.

 

இதற்காக, சேலம் சின்னக்கடை வீதி, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாப்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் காப்புக் கட்டு பொருட்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.