சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 31 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் தேவி மீனாள் அறிவித்துள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனைக்கு சேலம் மட்டுமல்லாது,நாமக்கல் தர்மபுரி,கிருஷ்ணகிரி,உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
அந்த வகையில்,நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட்ட நிலையில் சிறுவர்கள்,பெரியவர்கள் என அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவர்,அப்போது எதிர்பாராத விதமாக தீக்காயம் ஏற்பட வாய்ப்புள்ளது அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சேலம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு பிரிவு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் தெரிவிக்கையில் :-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் 31 படத்தில் கொண்ட சிறப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் மருத்துவர் குழுவினர் உள்ளதாகவும் தேவையான மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது எனவும் தெரிவித்தார் அதே போல் தீக்காய பிரிவில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் அங்கு பணியில் உள்ள மருத்துவர்கள் செவிலியர்களிடம் தேவையான உபகரணங்களையும் மருந்து மாத்திரைகளையும் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ளுமாறும் அப்படி தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு ஒருவரை முதலில் முதலுதவி செய்து பிறகு விசாரணை நடத்த வேண்டும் என அவர்களிடம் தெரிவித்தார்.
ஆய்வின்போது அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.தேவி மீனாள் தீக்காயை பிரிவு தலைவர்,சிவக்குமார் RMO ஸ்ரீ லதா மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர்.


