ட்ரெண்டிங்

கழிவுநீர், பாசிப் படர்ந்து காணப்படும் மேட்டூர் அணை!


மேட்டூர் அணையில் தேங்கும் கழிவுநீர் குறித்து செய்தி வெளியான நிலையில், 16 கண் மதகுப் பாலம் பகுதியில் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த நீர்வளத்துறை அதிகாரிகள் கிருமிநாசினியைத் தெளித்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை சுமார் 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 93.47 டி.எம்.சி. கொள்ளளவுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தும் போதெல்லாம், 16 கண் மதகுப் பாலம் பகுதிகளில் கழிவுநீர் மற்றும் பாசிப் படர்ந்து அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால், கரையோரம் வசிக்கும் மக்களும், மீனவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இது குறித்த செய்தி வெளியான நிலையில், மேட்டூர் அணையில் தேங்கும் கழிவுநீரால் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக, நீர்வளத்துறை அதிகாரிகள், கோவை வேளாண் கல்லூரியின் வழிகாட்டுதல் படி, மூலிகைத் திரவ கலவையைத் தெளித்து, துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் அணை தண்ணீரின் நிறம் நீலம், பச்சை என பல நிறங்களில் நாளுக்கு நாள் ரசாயன கழிவுகள் கலந்து வருகின்றனர். இதன் காரணமாக, குடிநீர் மட்டுமின்றி, டெல்டா மாவட்ட விவசாயிகளும் பாதிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளும், தமிழக அரசும் விரைந்து மேட்டூர் அணையில் கலந்து வரும் கழிவுநீரைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது மேட்டூர் அணை மக்களின் கோரிக்கையாக உள்ளது.