ட்ரெண்டிங்

அச்சக உரிமையாளர்களுக்கு தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்! 

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் சட்டமன்ற தொகுதி (தெற்கு) அலுவலகமாக செயல்பட்டு வரும் கொண்டலாம்பட்டி மண்டலம் அலுவலக கூட்ட அறையில் நடைபெற்ற அச்சக உரிமையாளர்கள் கூட்டத்தில், சேலம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சீ.பாலச்சந்தர் அச்சக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

இது குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சீ.பாலச்சந்தர் பேசியதாவது, தேர்தல் தொடர்பான துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் போன்ற தேர்தல் தொடர்பான விளம்பரங்களை அச்சக உரிமையாளர்கள் அச்சிட்டு பிரசுரம் செய்யும் போது கண்டிப்பாக அச்சக உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றினை அச்சடிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 127 A(1) படி குற்றமாகும். பிரசுரங்கள் அச்சடித்து முடித்த பின்னர் அதன் Duplicate Copy பெற்று அதில் ஒன்றை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். 

அச்சடித்த பிரசுரங்களின் எண்ணிக்கை குறித்து தெளிவாக படிவம் 2-ல் குறிப்பிட்டு மூன்று தினங்களுக்குள் நான்கு பிரசுரங்களை தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். ஒவ்வொரு வகையான சுவரொட்டி மற்றும் துண்டு பிரகரத்திற்கு தனித்தனியே இணைப்பு -2ல் அச்சக உரிமையாளர்கள் அறிக்கை அளிக்க வேண்டும். Appendix A, B படிவங்கள் தமிழ் வடிவங்களில் இருக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளும் தமிழ் வடிவங்களில் இருக்க வேண்டும் என அச்சசு உரிமையாளரால் கேட்டுக்கொள்ளப்பட்டதன் பேரில தமிழில் படிவம் வழங்கப்பட வேண்டும். 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 127 A (1), 127 A (2) ன் உரிய அறிக்கை அனுப்பாத அச்சக உரிமையாளர் மற்றும் பதிப்பகத்தார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிமுறைகள் மீறப்பட்டது. உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். அதனை தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும். அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரமானது சட்டத்திற்கு புறம்பானதாகவோ அல்லது மதம், இனம், மொழி, வகுப்பு மற்றும் சாதி ஆகிய விவரங்கள் தொடர்பான எதிர்ப்பு இருந்தாலோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் அச்சக உரிமையாளரால் வழங்கப்பட்ட சுவரொட்டி துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட வேண்டும். அச்சக உரிமையாளரால் வழங்கப்பட்டுள்ள படிவம் தேர்தல் பார்வையாளருக்கு தேர்தல் செலவினத்தில் சேர்த்துக் கொள்வதற்காக அனுப்பப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் பிரிவை தொடர்பு கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள கண்டிப்புடன் கடைபிடித்து தேர்தல் அமைதியான முறையில் நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.